தங்கள் குழந்தையின் கோரமான தோற்றம்
பராமரிக்க முடியாமல் நிராகரித்த பெற்றோர்

இந்தியாவை சேர்ந்த தம்பதியர் தங்கள் குழந்தையின் மோசமான தோற்றத்தை பார்த்து, அதனை பராமரிக்க முடியாமல் நிராகரித்து சென்ற செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூளையில் திரவம் அதிகமாகும் ஹைட்ரோசிபாலஸ்(hydrocephalus) என்ற நோயால் ராயல் குமார் பாதிக்கப்பட்டுள்ளான். இதன் காரணமாக இச்சிறுவனின் தலைப்பகுதி சாதாரண அளவை விட 3 மடங்கு பெரிதாகவும், மேலும் பார்ப்பதற்கு கோரமாகவும் இருந்துள்ளது.

தொடர்ந்து வாந்தி எடுத்தல், தூக்கமின்மை போன்ற பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளான். குழந்தை படும் துயரத்தை கொஞ்சம் கூட உணர்ந்துகொள்ளாத பெற்றோர் அவனை கைவிட்டுள்ளனர்.

தங்கள் குழந்தையை பராமரிப்பது சிரமமாக உள்ளது என கூறியுள்ளனர். இந்நிலையில், குழந்தையின் உறவினர்களான பிரபா தேவி (30) மற்றும் அவரது கணவர் ராஜேந்திர பிரசாத் ஆகிய இருவரும் தான் அக்குழந்தையை பராமரித்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் தாங்கள் சேமித்து வைத்த நகைகள் மற்றும் அனைத்தையும் அடமானம் வைத்து குழந்தையின் வாழ்க்கையை காப்பாற்ற போராடுகின்றனர்.

குழந்தையின் மருத்துவ செலவுக்கு இதுவரை 2,00,000 செலவாகியிருந்தாலும் முன்னேற்றம் எதுவும் ஏற்படவிலை என இவர்கள் கூறியுள்ளனர்.

ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், மூளையில் உள்ள திரவத்தை நீக்க shunt என்னும் மருத்துவ உபகரணத்தை உள்ளே செலுத்தி, அதன் மூலம் இரத்த ஓட்டத்தை இலகுவாக்கி சரி செய்யும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.

இதில், அச்சிறுவனுக்கு பொருத்தப்பட்ட shunt சரியான முறையில் வேலை செய்யாத காரணத்தால், மூளையின் மற்றொரு பக்கத்திலும் அக்கருவியை பொருத்தியுள்ளனர்.

இதன் காரணமாக, அக்குழந்தையின் உடலில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வாந்தி எடுத்தல், தூக்கமின்மை பிரச்சனையிலிருந்து விடுபட்டுள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top