முதலமைச்சர் இசுறு தேவப்பிரியவின்
அலுவலகத்தைமுற்றுகையிட்ட மக்கள்

சனச கிராமிய வங்கியின் மஹரகம கிளையில்
68 கோடி ரூபா முதலீடு செய்தவர்களாம்

மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரியவின் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டதுடன், முதலமைச்சரையும் சூழ்ந்து கொண்டதால் குறித்த பகுதியில்  பெரும் பதற்றம் ஏற்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.
கொழும்பு கோட்டையில் உள்ள மேல்மாகாண மாகாண சபையில் வைத்து முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய இன்று மக்களால் சிறைபிடிக்கப்பட்டார்.
சனச கிராமிய வங்கியின் மஹரகம கிளையில் 68 கோடி ரூபா முதலீடு செய்த மக்களே இவ்வாறு இவரின் அலுவலகத்தை முற்றுகையிட்னர்.
இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், சனச வங்கியின் மஹரகம கிளையில் 68 கோடி ரூபா முதலீடு செய்ததாகவும், தற்போது அந்தப் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், சனச கிராமிய வங்கியின் முன்னாள் தலைவர்களே இதற்கு காரணம் எனவும் கூறியுள்ளார்கள்.
குறித்த மோசடிகளில் மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரியவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், அதனாலேயே இவர்கள் மேல்மாகாண மாகாண சபையை முற்றுகையிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர்,
தமக்கும் இந்த சனச கிராமிய வங்கியின் 68 கோடி ரூபா மோசடிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. நான் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே இந்த மோசடி நடந்துள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

தமக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான தீர்வை ஏற்படுத்தி தருவதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய கூறியுள்ளார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top