காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து நிலவி வரும் வன்முறை
சம்பவத்தால்
49 நாட்களில் ரூ.6,400 கோடி இழப்பு
காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து நிலவி வரும் வன்முறை சம்பவத்தால் சுமார் 6 ஆயிரத்து 400 கோடி ரூபாய் வரையில் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த மாதம் 8-ம் திகதி ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த புர்ஹான் வானி பாதுகாப்புப்
படையினரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் பொதுமக்கள் மற்றும் பொலிஸார், துணைராணுவப்படையினர் தரப்பில் 66 பேர் வரையில் பலியாயினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொடர்ந்து வன்முறை சம்பவம் நிகழாமல் தடுக்கும் விதமாக இண்டர்நெட் சேவை முடக்கி வைக்கப்பட்டது.
வன்முறை சம்பவம் தொடர்ந்து 49 நாட்களாக நீடித்து வரும் நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றிற்கு சுமார் 135 கோடி ரூபாய் வீதம் இது நாள் வரையில் (49 நாட்கள்) சுமார் 6 ஆயிரத்து 400 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என மாநிலத்தின் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தக அமைப்பின் தலைவர் முஹம்மது யாசின் கான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், வன்முறை மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் சுற்றுலா மற்றும் அதனை சார்ந்துள்ள ஹோட்டல் தொழில்கள் போன்றவையும் பாதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment