முத்திரைகளில் முஸ்லிம் முக்கியஸ்தர்கள்
இலங்கை முத்திரைப் அப்பணியகம் அண்மையில் நம்நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து 2014 இறுதிவரை வெளியிட்ட தபால் முத்திரைகளின் விபரங்களையெல்லாம் திரட்டி இரு தொகுதிகளாய் வெளியிட்டுள்ளது.
அவற்றை மெதுமெதுவாய்ப் புரட்டி அந்தக்காலத்தில் 2014 இறுதி வரை வெளியாகியுள்ள சுமார் 2000 முத்திரைகளில் எந்தெந்த முஸ்லிம் முக்கியஸ்தர்கள் முகங்கள் தென்படுகின்றன என்று பார்த்தபோது அவற்றை வெளிவந்த திகதிவாரியாய்ப் பட்டியலிடத் தோன்றிற்று.
1977.06.11
அறிஞர் சித்திலெப்பை
1981. 05. 31
அல்ஹாஜ் டொக்டர் TB.ஜாயா
1983. 05. 22
NHM அப்துல்காதர்
1983. 11. 13
ஒராபி பாஷா
1984. 05. 22
ஸேர் மொஹமட் மாக்கான் மாக்கார்
1985.05.22
AM வாப்புச்சி மரிக்கார்
1986. 05. 22
AMA அஸீஸ்
1987. 05. 22
MC அப்துல்ரஹ்மான்
1988. 05. 22
ஸேர் ராஸிக் பரீத்
1988. 07. 05
பில்லியர்ட்ஸ் வீரர் MJM லாபிர்
1992. 05. 22
ILM அப்துல்அஸீஸ்
1993. 05. 22
அல்ஹாஜ் NDH. அப்துல்கபூர்
1995. 06. 09
சட்டத்தரணி MC அப்துல்காதர்
1997. 11. 11
தொழிற்சங்கவாதி அப்துல்அஸீஸ்
1999. 12. 08
டொக்டர் அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத்
2002. 09. 03
டொக்டர் ACS. ஹமீத்
2002. 10. 18
அல்ஹாஜ் டொக்டர் MCM கலீல்
2003. 05. 18
சபாநாயகர் அல்ஹாஜ் HS இஸ்மாயில்
2003. 09. 18
முகா தலைவர் MHM. அஷ்ரப்
2005. 07. 20
தேசமான்ய MA பாக்கீர் மாக்கார்
2009. 03. 13
MS காரியப்பர்
2009. 07. 25
மஹ்மூத் ஹஸரத்
இந்தப் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டிய நாட்டுக்கு நல்லது செய்த முஸ்லிம் அறிஞர்கள், கல்விமான்கள், மார்க்க மேதைகள், அரசியல் தலைவர்கள், கலைஞர்கள் இன்னும் யார் யாரோ இருப்பார்கள். எதிர்காலம் அவர்களையும் ஞாபகார்த்த முத்திரைகளிட்டு கௌரவிக்குமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
இதுவரை வெளியான முத்திரைகள் இதோ!
தொகுப்பு:- Mahdy
Hassan Ibrahim
0 comments:
Post a Comment