அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஜீன் வைல்டர் காலமானார்

அமெரிக்காவின் நகைச்சுவை நடிகர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் பட இயக்குநரான ஜீன் வைல்டர் (83) நேற்று காலமானார்.

வில்லி ஆம்ஸ்ட்ராங் சர்க்கிள் தியேட்டர் என்ற டிவி தொடரின் மூலம் அறிமுகமான இவர், மெல் புரூக்ஸின் படத்திற்குப் பிறகு தி புரோடீயூசர்ஸ் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் ஸ்டாண்ட் அப் காமெடியனான ரிச்சர்டு ப்ரியருடன் இணைந்து சில்வர் ஸ்ட்ரீக், ஸ்டிர் கிரேஸி, சீ நோ ஈவில், ஹியர் நோ ஈவில் மற்றும் அனதர் யு போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தி உமன் இன் ரெட் (The Woman in Red) உள்பட பல படங்களுக்கு திரைக்கதை எழுதி, இயக்கியுள்ளார்.


இவரது மனைவி கில்டா ராட்னர் கருப்பப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முறையை ஊக்குவித்து லாஸ் ஏஞ்சல்ஸில் கருப்பப்பை புற்றுநோய் கண்டறிதல் மையத்தை தொடங்கினார். நடிப்பிலும் தயாரிப்பிலும் பிரபலமான வைல்டர் நேற்று காலமானார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top