குழந்தைகளின் மூளை வளர்ச்சியை
சீராக வைக்கும் உணவுகள்



குழந்தைகளின் மூளை வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமானதாகவும் வைப்பது பெற்றோர்களின் கடமை. ஆகவே குழந்தைகள் வளரும் போதே, அவர்களின் உடல் நலனில் பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். சரியாக குழந்தைகளை கவனிக்காவிட்டால், குழந்தைகளின் உடலில் ஊட்டச்சத்து பற்றாக்குறை, வைட்டமின் பற்றாக்குறை போன்றவை ஏற்படும்.
குழந்தைகளின் மூளையை நன்கு செயல்பட வைக்கவும், ஆர்வத்தை அதிகரிக்கவும், மூளையின் இயக்கத்தை சீராக வைக்கக்கூடிய உணவுகளை சிறுவயதிலிருந்தே கொடுக்க வேண்டும். உடலிலேயே அதிக சத்துக்களை உறிஞ்சுவது மூளை தான். அதுமட்டுமின்றி, மூளை தான் உடலின் அனைத்து உறுப்புக்களை இயக்குகிறது.
எனவே அத்தகைய முக்கியப் பகுதியை ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் மாற்றிவிடுகின்றன. எனவே மூளையை பாதுகாப்பதற்கு ஒரே வழி உணவு தான்.
ஆகவே அந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், மூளை ஆரோக்கியமாக இருப்பதோடு, நன்கு செயல்பட்டு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
சிறுவயதிலிருந்தே குழந்தைகளின் மூளை வளர்ச்சியை சீராக வைக்கும் உணவுகள் என்னவென்று பார்க்கலாம்.
புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ள முட்டையின் மஞ்சள் கருவில், கோலைன் என்னும் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் பொருள் அதிகமாக உள்ளது. எனவே வளரும் குழந்தைகளுக்கு தினமும் 2 முட்டைகளை கொடுத்தால், குழந்தைகளின் மூளையானது சீராக இயங்கும்.

பொதுவாக குழந்தைகளுக்கு பொரித்த உணவுகளை ஸ்நாக்ஸாக கொடுப்பதற்கு பதிலாக, வேர்க்கடலையை வறுத்தோ அல்லது வேக வைத்தோ கொடுத்தால், மூளைக்கு மிகவும் நல்லது.
மூளைக்கு எப்போதும் குளுக்கோஸானது சீராக செல்ல வேண்டும். அத்தகைய குளுக்கோஸ் தானியங்களில் அதிகம் உள்ளது. எனவே தானியங்களால் ஆன பிரட்டை வைத்து, காலை அல்லது மாலை வேளையில் சாண்ட்விச் செய்து கொடுத்தால், குழந்தைகளின் வயிறு நிறைவதோடு, மூளை வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.
ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, ப்ளூபெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்ற பழங்களின் சுவைகள் குழந்தைகளுக்கு பிடிக்கும். மேலும் இத்தகைய பழங்களை குழந்தைகள் அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தியானது அதிகரிக்கும் என்று ஆய்வுகளும் நிரூபித்துள்ளன.
மூளையில் ஏற்படும் பிரச்சனையை போக்குவதில் தக்காளி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில் இதில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை உடலில் பிரச்சனையை உண்டாக்கும் செல்களை அழித்து விடுகின்றன. எனவே குழந்தைகளுக்கு ஞாபக மறதி எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கு, தக்காளியை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்
குடைமிளகாயும் மூளைக்கு ஏற்ற ஒரு சிறப்பான உணவு. அதிலும் குடைமிளகாயில், ஆரஞ்சை விட, அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே உணவில் குடைமிளகாயை சேர்த்து கொடுப்பது, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும்.
பால் பொருட்களில் புரோட்டீன் மற்றும் மூளை வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் பி அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே குழந்தைகளுக்கு தவறாமல் தினமும் பால் பொருட்களை கொடுப்பது அவசியமாகிறது.
சாக்லெட் குழந்தைகளுக்கு கொடுக்காமல் சில அம்மாக்கள் இருப்பார்கள். ஆனால் உண்மையில் தினமும் குழந்தைகளுக்கு ஒரு துண்டு டார்க் சாக்லெட் கொடுப்பது மிகவும் நல்லது. இது அவர்களது உடலை மட்டும் ஆரோக்கியத்துடன் வைப்பதோடு, மூளை வளர்ச்சியை ஆரோக்கியமானதாக வைக்கும்.
ஆய்வு ஒன்றில் கோகோ பீன்ஸை அதிகம் சாப்பிட்டால், மூளையின் ஆரோக்கியமானது அதிகரிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே கோகோ பீன்ஸை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், மிகவும் நல்லது.
நட்ஸ் வகைகளில் வைட்டமின் அதிகம் உள்ளது. பொதுவாக வைட்டமின் குறைபாடும் ஞாபக மறதியை உண்டாக்கும். எனவே நட்ஸ் வகைகளை அதிகம் கொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இதில் உடலுக்கு தேவையான கொழுப்புக்களும் நிறைந்துள்ளன.

உண்மையில் பீன்ஸ் ஒரு ஸ்பெஷலான உணவுப் பொருள் தான். ஏனெனில் இதில் உள்ள புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், நார்ச்சத்துக்கள் மற்றும் நிறைய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top