படுகொலை செய்யப்பட்ட பம்பலப்பிட்டி வர்த்தகர்
முஹம்மது
ஷகீப் சுலைமானின் ஜனாஸா நல்லடக்கம்!
கடத்திப்
படுகொலை செய்யப்பட்ட
பம்பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் முஹம்மது
ஷகீப் சுலைமானின்
உடல் நேற்றிரவு
கொழும்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மாவனல்லைப்
பிரதேசத்தில் எரியூட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஷகீபின் மரணம் தொடர்பான பிரேத
பரிசோதனை நேற்று
கேகாலை பொதுமருத்துவமனையில்
நடைபெற்றது.
தலைப்பகுதியில்
விழுந்த இரண்டு
பலமான தாக்குதல்கள்
காரணமாக காயமேற்பட்டு
மூளையில் இரத்தக்கசிவு
காரணமாக அவர்
உயிரிழந்துள்ளமை பிரேத பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில்,
நேற்று மாலை
கொழும்பு, பம்பலப்பிட்டி,
கொத்தலாவல மாவத்தையில்
உள்ள இல்லத்திற்கு
ஷகீபின் ஜனாஸா எடுத்து வரப்பட்டபோது
அரசியல்வாதிகள் பலரும் அங்கு சமூகமளித்திருந்தனர்.
பின்னர்
மாளிகாவத்தைக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஜனாஸா, நேற்று இரவு இஷா
தொழுகையின் பின்னர் மாளிகாவத்தை மையவாடியில் நல்லடக்கம்
செய்யப்பட்டுள்ளது.
பம்பலபிட்டி பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் மொஹமட் சுலைமான் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகள் கோகலை வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்திய அதிகாரி ரமேஷ் அலகியவத்தவினால் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், உயிரிழந்தமைக்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது. தட்டையான ஆயுதத்தினால் தலையின் பின் பகுதியில் தாக்கப்பட்டமையால், உடலினுள் இரத்தக் கசிவு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர் கடத்தப்பட்டு ஒரு மணித்தியாலம் வரையான காலப் பகுதியில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
கடந்த 21ஆம் திகதி பம்பலபிட்டி பகுதியை சேர்ந்த வர்த்தகரான முஹம்மட் ஷாகிப் சுலைமான் என்பவர் கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தார்.
இதனையடுத்து உறவினர்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில், உயிரிழந்த நபரொருவரின் சடலம், மாவனெல்ல பகுதியில் இருந்து மீட்கப்பட்டதோடு, அது காணாமல் போன வர்த்தகருடையதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்ட நிலையில் உறுதி செய்யப்பட்டது.
இதேவேளை, கைப்பற்றப்பட்ட சடலம் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, குற்றப் பிரிவினர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment