ஐக்கிய நாடுகள்
சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்
இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நேற்று இரவு,பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தினார்.
நேற்று இரவு 7.40 அளவில் இலங்கையை வந்தடைந்த அவர், முதல் சந்திப்பாக பிரதமருடன்கலந்துரையாடல்களை நடத்தினார்.
இதன்போது இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் அபிவிருத்தி என்பன தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே ஐக்கிய நாடுகள் செயலாளரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக், போர்க்குற்ற விசாரணைகளின்போது சர்வதேச நீதிபதிகளின் உள்ளடக்கம் குறித்த விடயத்தை இலங்கை தலைவர்களுடன் பேசுவார் என்று குறிப்பிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், நேற்றைய சந்திப்பு தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கை எதுவும்இதுவரை வெளியாகவில்லை.
இந்தநிலையில், இன்று பான் கீ மூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
0 comments:
Post a Comment