நன்றி, தற்போது டீ அருந்துங்கள்:
நிருபர்கள் கேள்விக்கு கோபமாக பதில் அளித்த
காஷ்மீர் முதல்வர்
மெகபூபா முப்தி
காஷ்மீரில்
தொடர்ந்து வன்முறை
நீடித்து வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ‘நன்றி,
தற்போது தேனீர்
அருந்துங்கள்’ என்று காஷ்மீர் முதல்வர் கோபமாக
பதில் அளித்துள்ளார்.
காஷ்மீரில்
கடந்த 48 நாட்களுக்கும்
மேலாக வன்முறை
நடைபெற்று வருகிறது.
ஏறக்குறைய காஷ்மீர்
முழுவதும் ஊரடங்கு
உத்தரவு பிறப்பித்த
பின்னரும் வன்முறை
குறைந்த பாடில்லை.
இந்த வன்முறைக்கு
68-க்கும் மேற்பட்டோர்
உயிரிழந்துள்ளனர்.
காஷ்மீர்
பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய
உள்துறை மந்திரி
ராஜ்நாத் சிங்
காஷ்மீர் சென்றுள்ளார்.
அவர் காஷ்மீர்
முதல்வர் மெகபூபா
முப்தி உடன்
ஆலோசனை நடத்தினார்.
பின்னர். மெகபூபா
முப்தி பத்திரிகையாளர்களுக்கு
பேட்டியளித்தார். அப்போது ராஜ்நாத் சிங்கும் உடனிருந்தார்.
அப்போது
சில நிருபர்கள்
தற்போதைய சம்பவத்தின்போதும்,
2010-ம் ஆண்டு
நடைபெற்ற சம்பவத்தின்போதும்
மெகபூபா முப்தி எடுத்துள்ள நிலை
குறித்து கேள்வி
எழுப்பினர்.
இதனால்
கோபம் அடைந்த
மெகபூபா முப்தி ‘‘அவர்கள் என்னிடம்
என்ன சொல்ல
முடியும். நான்
அவர்களுடைய குழந்தைகளை சிறப்பு அதிரடிப்படையினரிடம் இருந்து காப்பாற்றியுள்ளேன்.
நன்றி,
தற்போது நீங்கள்
தேனீர் அருந்த
முடியும்’’ என்று கோபமாக கூறிவிட்டு பத்திரிகையளார்கள்
சந்திப்பை முடித்துக்
கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது..
0 comments:
Post a Comment