கிரிக்கெட்
ரசிகர்கள் மீது தண்ணீர் தாரைப்பிரயோகம்
கண்ணீர் புகைப்பிரயோகம்
இறுதிப்
போட்டியை பார்வையிடுவதற்கு
தங்களுக்கு டிக்கெட் கிடைக்காமையால், பெருந்திரளான ரசிகர்கள்,
குருணாகல்-கொழும்பு
பிரதான வீதியை
மறித்து எதிர்ப்பு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை
களைப்பதற்கே பொலிஸார், தண்ணீர் தாரைப்பிரயோகம் மேற்கொண்டதுடன்
கண்ணீர்ப் புகைப்பிரயோகமும்
மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தம்புள்ளை சர்வதேச விளையாட்டரங்கில் தற்போது இடம்பெற்று வரும் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 4ஆவது ஒரு நாள் கிரிக்கட் போட்டியை பார்வையிட வந்த ரசிகர்கள் நுழைவுச்சீட்டு கிடைக்காமல் கொந்தளித்து வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
நுழைவுச்சீட்டு கிடைக்காத பார்வையாளர்கள் அருகில் இருந்த சுவர்களில் ஏறியும் கூச்சலிட்டும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அத்தோடு தம்புள்ளையினூடான குருநாகல் கொழும்பு போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முடியாது போன நிலையில் கண்ணீர்ப்புகை பிரயோகிக்கப்பட்டுள்ளது.
6 வருடங்களுக்கு பின்னர் தம்புள்ளையில் சர்வதேச போட்டியொன்றை பார்வையிட சந்தர்ப்பம் கிடைத்தும் பார்வையிட முடியாது போனமையையிட்டு ரசிகர்கள் ஆக்ரோஷமடைந்துள்ளனர்.
தம்புள்ளை மைதானத்தில் 20,000 பார்வையாளர்களுக்கான வசதிகளே உண்டு என்பதும் முன்னர் இடம்பெற்ற போட்டியில் 4.6 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment