ஸ்டோர் பேலஸ் என்ற ஆப்கன் அரண்மனையை
இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்
ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள புதுப்பிக்கப்பட்ட மன்னர் கால அரண்மனையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொலி (விடியோ கான்ஃபரன்ஸ்) முறையில் நேற்று திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மலை உச்சியில் ஸ்டோர் பேலஸ் என்ற அரண்மனையை ஆப்கன் மன்னர் அமானுல்லா கான் கடந்த 1920ஆம் ஆண்டுகளில் கட்டினார். அந்த அரண்மனை சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. அந்த அரண்மனையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆப்கன் ஜனாதிபதி அஷ்ரஃப் கனியுடன் இணைந்து காணொலி முறையில் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
ஆப்கானிஸ்தான் நமது நெருங்கிய நட்பு நாடு. நமது சமூகங்களும் மக்களும் தொன்மையான உறவுகளையும் பாரம்பரியத்தையும் கொண்டவர்கள்.
உங்கள் நாட்டுக்கு (ஆப்கன்) தொடர்ந்து அன்னிய சக்திகளாலும், பயங்கரவாதக் குழுக்களாலும் சவால் விடுக்கப்படுவது எங்களைக் கவலையில் ஆழ்த்துகிறது. வளமான ஆப்கானிஸ்தானை உருவாக்கவும், அமைதியை, பாதுகாப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றை உங்கள் சமூகத்துக்கு கொண்டுவரவும் நீங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு இந்தியாவின் 125 கோடி மக்களும் துணை நிற்பார்கள் என்று உறுதியளிக்கிறேன் இவ்வாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிதெரிவித்தார்.
0 comments:
Post a Comment