2015 க.பொ.த. சாதாரண தர திறமைச் சித்தியாளர்கள்
ஜனாதிபதியைச் சந்தித்தனர்

2015 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மிகத் திறமையாக சித்தியடைந்து நாட்டின் முதல் 10 இடங்களைப் பெற்ற 12 மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தனர்.
இம்மாணவர்களின் திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மாணவர்களுக்கான பணப் பரிசில்களும் ஜனாதிபதி அவர்களினால் வழங்கப்பட்டதுடன், மடி கணனிகளும் பரிசாக வழங்கப்பட்டது.
2015 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மிகத் திறமையாக சித்தியடைந்து நாட்டில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட கொழும்பு விசாகா மகளிர் கல்லூரியைச் சேர்ந்த எஸ். சத்சரணி ஹெட்டியாராச்சி, இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட கொழும்பு நாலந்தா கல்லூரியைச் சேர்ந்த கே.கே.சமல் புன்சர, மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட கொழும்பு தேவி பாலிக்கா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆர்.மலீனா ரத்னாயக்க, கண்டி மகா மாயா மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ஆர்.எம். இந்திவரி உமயங்கா ஆகியோர் உள்ளிட்ட முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் இதில் கலந்துகொண்டனர்.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணன், கல்வி அமைச்சின் செயலாளர் டப்ளியு.எம்.பந்துசேன ஆகியோர் உள்ளிட்ட குழுவினரும் இதில் கலந்துகொண்டனர்.





GCE O/L top scorers meet President

Top ten scored students of the GCE O/L exam – 2015 met President Maithripala Sirisena at the Presidential Secretariat today (Aug. 23).
The President commended the skills of these students and extended his warm congratulation to them.
He presented financial gifts and laptops to the students.
The top scorer, S. Sathsarani Hettiarachchi from Vishaka Girls’ School in Colombo, the second scorer K. K. Samal Punsara from Nalanda College Colombo and the third scorers;  R. Maleena Rathnayake from Devi Balika Vidyalaya, R. M. Indeewari Umayanga from Mahamaya Vidyalaya in Kandy and the students who won the places up to ten met the President. The parents of the students also were present at this occasion.

Minister of Education Akila Viraj Kariyawasam, State Minister V. Radhakrishnan, Secretary to the Education Ministry W. M. Bandusena also were among those participated.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top