சவூதி அரேபியாவில் அல் ரசூல் அல் ஆதம் மசூதியில்
தற்கொலைப்படை தாக்குதல் முயற்சி முறியடிப்பு
சவூதி அரேபியா நாட்டில் உள்ள மசூதி ஒன்றில் தற்கொலைப்படை தாக்குதல்
நடத்தும் முயற்சி பாதுகாப்பு படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
சவூதி
அரேபியாவின் கிழக்கு பகுதியில் அல்-காதிப்
பிராந்தியத்தில் உம் அல் ஹமாம் கிராமத்தில்
ஷியா பிரிவினர்
தொழுகை நடத்துகிற
அல் ரசூல்
அல் ஆதம்
மசூதி உள்ளது.
இந்த
மசூதியில் தற்கொலைப்படை
தாக்குதல் நடத்தும்
நோக்கத்துடன் ஒரு பயங்கரவாதி இடுப்பில் வெடிகுண்டுகள்
வைத்து கட்டப்பட்ட
பெல்ட் அணிந்து
வந்தார். அவருடன்
மற்றொரு நபரும்
வந்தார். இதைக்கண்ட
பாதுகாப்பு படையினர், அந்த பயங்கரவாதி தாக்குதல்
நடத்துவதற்கு முன்னதாக அவரை சுட்டுக்கொன்றனர். அவருடன் வந்த நபர் கைது
செய்யப்பட்டார்.
சரியான
நேரத்தில் பாதுகாப்பு
படையினர் அவரை
சுட்டுக்கொன்றதால், விரும்பத்தகாத சம்பவம்
தவிர்க்கப்பட்டு விட்டது. தாக்குதல் நடத்த வந்த
2 பேரும், சவூதியை
சேர்ந்தவர்கள் அல்ல; ஆனால் சவூதியில் வசித்து
வந்தனர் என்று
தெரிய வந்துள்ளது.
இந்த
சம்பவத்தை தொடர்ந்து
பாதுகாப்பு படையினர் அந்த மசூதி வளாகத்தை
சுற்றி வளைத்தனர்.
அந்தப் பகுதியில்
வேறு எங்கும்
குண்டு வைக்கப்பட்டுள்ளதா
என அங்குலம்,
அங்குலமாக தேடுதல்
வேட்டை நடத்தினர்.
ஆனால் அப்படி
எதுவும் சிக்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment