உலகின் மிக
பெரிய விமானம் சோதனை ஓட்டத்தில் விபத்து
உலகின்
மிகப் பெரிய
விமானமான, 'ஏர்லாண்டர் - 10' பிரிட்டனில்,
இரண்டாவது சோதனை
ஓட்டத்தின்போது, தரையில் மோதி, விபத்துக்குள்ளானது;
இவ்விபத்தில், யாருக்கும்
காயம் ஏற்படவில்லை.
பிரிட்டனைச் சேர்ந்த, 'ஹை பெர்ட் ஏர்
வெக்கில்ஸ்' என்ற, பிரபலமான விமான தயாரிப்பு
நிறுவனம், உலகின்
மிகப் பெரிய
விமானத்தை தயாரித்துள்ளது.
'ஏர்லாண்டர் - 10' என, பெயரிடப்பட்டுள்ள
இந்த விமானம்,
302 அடி நீளமும்,
143 அடி அகலமும்
உடையது. இந்த
விமானத்தின் முதல் சோதனை ஓட்டம், சமீபத்தில்
வெற்றிகரமாக நடந்தது.
இந்நிலையில்,
இரண்டாவது சோதனை
ஓட்டம், பிரிட்டனின்,
பெட்போர்ட்ஷைர் நகரில் உள்ள பிரம்மாண்ட விமான
தளத்தில் நேற்று
நடந்தது; அப்போது,
விமானம், பறக்க
தயாராகி மேலே
எழுந்தபோது, திடீரென தரையில் மோதியது. இதனால்,
விமானத்தின் முன்பகுதி பலத்த சேதடைந்தது. ஆனாலும்,
'அதில் இருந்த
பைலட் உள்ளிட்ட
யாருக்கும் காயம் ஏற்படவில்லை' என, விமான
நிறுவனம் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது; இந்த விமானம்,
ஹீலியம் வாயு
மூலம் இயங்கக்கூடியது.
0 comments:
Post a Comment