தெருக்கடையில் மீன் சாப்பிட்ட
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன்

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் தெருக்கடையில் அமர்ந்து மீன் மற்றும் சிப்ஸ் சாப்பிட்ட புகைப்படம் மற்றும் சில புகைப்படங்களௌம் வெளியாகியுள்ள.

உலகின் அதிகாரமிக்க தலைவராக இருந்த டேவிட் கமருன் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் வாக்கெடுப்பிற்கு பின்னர் பதவி விலகினார்.

அரச மாளிகையை விட்டு வெளியேறிய இவர், தற்போது தனது குடும்பத்தினருடன் சேர்ந்து விடுமுறை நாட்களை கழித்து வருகிறார். இவர் பதவி விலகிய நாட்களில் இருந்து, இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது ஊடகங்களில் வெளியாகி வந்தன.

இவர் தனது குடும்பத்தினருடன் ஒரு கடையில் நின்று ஏதேனும் ஒரு பொருள் வாங்கிகொண்டிருந்தால் கூட, அதனை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிடும் நெட்டிசன்கள், அதனுடன் சேர்த்து, கமரூன் சந்தோஷமாக இருக்கிறார், கவலையாக இருக்கிறார் என்ற கருத்துக்களையும் தட்டிவிடுவர்.

தற்போது, அதே போன்று ஒரு புகைப்படங்க்ள் வெளியாகியுள்ள. விடுமுறையை முன்னிட்டு Cornwall- இல் உள்ள தெருக்கடையில் அமர்ந்து மீன் மற்றும் சிப்ஸ்ஸினை கமரூன் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.

இவருக்கு அருகில் சக நபர்களும் சாதாரணமாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றனர். ஒரு பெண் ஒருவர் தனது பின்புறத்தை காட்டியவாறு கமரூனுக்கு அருகாமையில் நிற்கிறார், அப்பெண், கமரூனின் மனைவி சமந்தா தானா என்பது சரியாக தெரியவரவில்லை.

தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது, இவர் எவ்வளவு மன வருத்தத்துடன் இருக்கிறார் என்பதை இந்த புகைப்படமே நமக்கு உணர்த்துகிறது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


மேலும் உலகின் அதிகாரமிக்க மனிதராக வலம் வந்த இவர், தற்போதும் அதே அதிகாரத்தோடு இருந்தால் இவ்வாறு சாதாரணமாக அமர்ந்து சாப்பிட்டிருக்கமாட்டார் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top