இலங்கைக்கு புறப்பட்டு  வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படும்
மாலத்தீவு முன்னாள் ஜனாதிபதிக்கு கைது வாரண்ட்
பிறப்பித்ததுஅந்நாட்டு  நீதிமன்றம்



இலங்கைக்கு புறப்பட்டு  வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் சிறைத் தண்டனைக் காலத்தின்போது சிகிச்சைக்காக லண்டன் சென்ற மாலத்தீவு முன்னாள் ஜனாதிபதி நஷீத் நாடு திரும்பாததால் அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாலத்தீவில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி முகம்மது நஷீத். இவர் தீவிரவாத குற்றச்சாட்டில் 13 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். அவரது தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி ஆபரேசன் செய்துகொள்வதற்காக பிரிட்டன் செல்ல அனுமதி கேட்டார். முதலில் மறுத்த அரசாங்கம், பின்னர் அவரது உடல்நிலை மோசமானதையடுத்து வெளிநாட்டுக்கு செல்ல அனுமதி அளித்தது.

ஆனால், சிகிச்சைக்காக லண்டன் சென்ற நஷீத், உடல் நலம் தேறியபோதும் மாலத்தீவுக்கு திரும்பி வரவில்லை. சமீபத்தில் அவருக்கு அரசியல் அகதியாக தஞ்சம் அளித்துள்ளது பிரிட்டன்.


இந்நிலையில், நஷீத் மாலத்தீவின் அண்டை நாடான இலங்கைக்கு புறப்பட்டு  வந்தார். இதனையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைக்க அரசு அனுமதி கோரியது. இதனை ஏற்ற நீதிமன்றம், நஷீத்தை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top