மரணமடைந்த
ரயில் பயணி பையில் ரூ.99 லட்சம் பணம்
3 தங்க
பிஸ்கட்களும் இருந்தன
இந்தியாவில் ராய்ப்பூரிலிருந்து ஹவுரா நோக்கி சென்ற ரயில்
பயணி ஒருவர் ரயிலில் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவர் வைத்திருந்த பையில் ரூ.99 லட்சம் பணம் மற்றும் 3 தங்க பிஸ்கட்கள் இருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது.
மும்பை சிஎஸ்டி - ஹவுரா கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரயிலில்
சுபாஷ் சந்த் சுரானா(55) என்பவர் பயணித்தார். ரயில், டாடாநகர் ரயில் நிலையத்தை தாண்டியதும் சுயநினைவின்றி மயங்கி விழுந்தார்.
இதனைபார்த்த சக பயணிகள் ரயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், சுரானா மரணமடைந்து விட்டார். அவர் மாரடைப்பு
காரணமாக உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து
விட்டு பொலிஸார் , சுரானா உடமைகளை
சோதனை நடத்திய போது, அவர் பையில்
இருந்து ரூ.99,03.490 பணம் இருந்தது.
பெரும்பாலானவை ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. மேலும் 3 தங்க பிஸ்கட்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பணம் குறித்தும், தங்க பிஸ்கட்கள்
குறித்தும் மேற்கு மிட்னாப்பூர் பொலிஸார் விசாரணை நடத்த உள்ளனர்.
சுரானா மரணம் குறித்து அவரது குடும்பத்தினருக்க தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment