நடிகர் விஜய்
தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்
மருத்துவமனையில்
அனுமதி!
பிரபல
நடிகர் விஜய்யின்
தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர்
கேரளா மாநிலத்தின்
கோட்டயம் பகுதியில்
உள்ள ஒரு
தனியார் மருத்துவமனையில்
உடல் நலக்
குறைவினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தமிழக ஊடகங்கள்
தகவல்கள் வெளியிட்டுள்ளன.
எஸ்.ஏ. சந்திரசேகரன்(74)
கேரள மாநிலம்,
குமரகோமில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கி
ஓய்வெடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில்
இன்று அவர்
ரிசார்ட்டில் கால் தவறி வழுக்கி விழுந்ததாக
கூறப்படுகிறது. இதில் அவருக்கு தலை மற்றும்
கழுத்துப் பகுதியில்
பலத்த காயம்
ஏற்பட்டது. இதையடுத்து அவர் மீட்கப்பட்டு உடனே
கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு
தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment