மாபெரும் இரத்த தான முகாம்
கல்முனையன்ஸ்
ஃபோரமின் மற்றுமொரு முயற்சியாக - கல்முனை
அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியிற்கு மிக அவசரமாக இரத்தங்கள்
தேவைப்படுவதால், அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்து மாபெரும் இரத்த தான
முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்படுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
நம்மிடம்
இருப்பதை இல்லாதோர்க்கு கொடுத்து உதவும் செயலை தானம் என்று சொல்கிறோம். ஒருவரது பசியைப் போக்குவது அன்னதானம்; ஒருவருக்கு
பார்வை கொடுப்பது கண் தானம்; ஆனால் இறைவன் உதவியால் ஒருவருக்கு உயிரையே
கொடுக்கலாம் ஒரு தானத்தின் மூலமாக, ஆனால் அதற்காக நாம் நம் உயிரைக் கொடுக்க
வேண்டியதில்லை; நம் உடலிலிருந்து சிறிதளவு இரத்தத்தைக் கொடுத்தாலே போதும்.
”எவர் ஒருவர் ஓர் உயிரை வாழ வைக்கிறாரோ, அவர் எல்லா மக்களையும் வாழ வைத்தவர் போன்றவராவார்” என்ற புனித அல் குர்ஆனின் வசனத்தை உயிர்ப்பிக்கும் வகையில், நீங்கள் வழங்கும் சில சொட்டு
இரத்தம் எங்கோ ஒரு மூலையில் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் மனிதர்களின்
உயிரைக்காக்கும். சில சந்தர்ப்பங்களில் நீங்கள் தானம் செய்யும் இரத்தம் இரத்த
வங்கியூடாக உங்களுக்கோ அல்லது உங்கள் உறவினர்களுக்கோ கூட பயன்படலாம்.
ஆகவே
எம் உறவுகளுக்கும் , சமூகத்துக்கும் எம்மால் வழங்க முடிந்த ஒரு மகத்தான பேருதவியாக இதனைக்கருதி அனைவரும் தவறாமல் பங்குபற்றி இரத்த தானம் செய்து மனித குலத்தை வாழவைத்தோர்களாக மிளிர்வோம் என
அன்புடன் அழைக்கின்றோம். .
காலம் : எதிர்வரும் ஞாயிறு 28-08-2016.
நேரம் : காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை.
இடம் : அல் அஸ்ஹர் வித்தியாலயம், ஜும்மாஹ் பள்ளிவாசல் வீதி, கல்முனை.
நேரம் : காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை.
இடம் : அல் அஸ்ஹர் வித்தியாலயம், ஜும்மாஹ் பள்ளிவாசல் வீதி, கல்முனை.
குறிப்பு : இம் மாபெரும் இரத்த தான நிகழ்வில் தங்கள் வீட்டுப் பெண்களும் கலந்துகொள்ள பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அவர்களையும் அழைத்து வருமாறும்,
தாங்களின் நண்பர்கள், உறவினர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் அழைத்துவருமாறும்
வினையத்துடன் வேண்டுகிறோம்.
தொடர்புகளுக்கு,
0 comments:
Post a Comment