அம்பாறை
மாவட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டிய
முக்கிய
பிரச்சினைகள்
அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில்
நீண்டகாலமாக பல பிரச்சினைகளும் தேவைகளும்
இருந்து கொண்டிருக்கின்றன. அவைகளில் சில :-
-பொத்துவில் முஸ்லிம்களின் பூர்வீக காணிப்பிரச்சினை
(இறத்தல், கரங்கோ, பொத்தான, தகரம்பொல,
உடும்புக்குளம் ஆகிய
காணிகள்) முஸ்லிம் மீனவர் பிரச்சினை, பாதுகாப்புத்
தரப்பினரால் எதிர்நோக்கும் அசௌகரியங்களை உடன் தீர்த்து வைத்தல்.
-அக்கரைப்பற்று - முஸ்லிம்களின் வட்டமடு மேச்சல் தரை
மற்றும் விவசாயக் காணிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்
-முன்னாள் அமைச்சா் பேரியல் அஸரபினால் சவூதி அரசினால்
வழங்கப்பட்ட
500 வீடுகள் கொண்ட சுனாமி வீடமைப்புத் திட்டம் வீடில்லாமல்
வாழும் முஸ்லீம் குடும்பங்களுக்கு மீள கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
-சம்மாந்துறை வங்களாவடிப் பிரதேசத்தில் இளைஞா்களுக்கான
தொழில் வசதி வாய்ப்புக்கான தொழில் பேட்டைகள்
- நுரைச்சோலையில் முஸ்லிம்களால் செய்யப்பட்டு வந்த விவசாய
நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள பொருத்தமான தீர்வை வழங்க வேண்டும்.
- அட்டாளைச்சேனை - அஷ்ரப் நகரில் உள்ள முஸ்லிம்களுக்குச்
சொந்தமான காணிகளை இராணுவத்திரடமிருந்து மீட்டுத் தர வேண்டும்.
- ஒலுவில
துறைமுகத்திட்டத்தினால் பாதிப்படைந்துள்ள முஸ்லிம்களுக்கு உடன் நஷ்டஈட்டை
பெற்றுக்கொடுத்தல், கடலரிப்பை தடுக்க உரிய திட்டத்தை வகுக்க
வேண்டும்.
- ஓலுவில் துறைமுகம் மீன்பிடித்துறைமுகமாக செயல்படுத்த
நடவடிக்கை எடுத்தல்
- கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவிவரும்
வைத்தியா, தாதியா் விடுதிகள் மற்றும் கட்டிட வசதிகள்
இன்மை.
- கல்முனை ஸாஹிராக் கல்லுரிக்கு கட்டிடங்கள் மற்றும் கூட்ட
மண்டபம், மைதாணம் போன்ற குறைபாடுகள் நிவா்த்தி
செய்யப்படல் வேண்டும்
-சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபையை
பிரகடனப்படுத்துவதற்கான கால எல்லையை அறிவிக்க வேண்டும்.
- சாய்ந்தமருது, கல்முனைக்குடி, இஸ்லாமாபாத் ஆகிய பிரதேச முஸ்லிம்கள் எதிர்நோக்கும்
குடியிருப்பு நிலப் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதற்கான செயலணியை உருவாக்க
உத்தரவிட வேண்டும்.
- மருதமுனை சுனாமி வீடமைப்புத் திட்டத்தை உண்மையாக
பாதிப்புற்ற மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தை
விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் கொண்டுவந்து சர்வதேச தரத்திற்கு அபிவிருத்தி
செய்யப்படல் வேண்டும்
- கல்முனை நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கல்முனை நவீன
நகரமாக நிர்மாணிக்கப்படல் வேண்டும்.
- கல்முனை மாநகர சபைக்கு சகல வசதிகளும் கொண்ட செயலகம்
நிர்மாணிக்கப்படல் வேண்டும்
- சம்மாந்துறை - அம்பாறை நகருக்கிடைப்பட்ட முஸ்லிம்களின்
விவசாயக் காணிப்பிரச்சினையை தீர்க்க வேண்டும்
- வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தரமுயா்த்தப்பட்டு
கல்முனையில் மீள ஆரம்பிக்கப்படல் வேண்டும்.
- மட்டக்களப்பு புகையிரத பாதை கல்முனை- பொத்துவில் வரை
விஸ்தரிக்கப்படல் வேண்டும்.
- அட்டாளைச் சேனையில் உள்ள கல்விக் கல்லுாரி ஆசிரிய
பல்கலைக்கழக கல்லுரரியாக தரமுயத்தப்படல் வேண்டும். அத்துடன் ஆசிரிய பயிற்சிக்
கலாசாலையை அபிவிருத்தி செய்தல்,
- யுத்த காலத்தில் பயங்கரவாதிகளினால் உயிழந்தவா்களுக்கு
நஸ்ட ஈடு மற்றும் உயிரிழந்து முஸ்லிம் பொலிஸ், ஊர்காவல் படை
அவா்களது குடும்பங்களுக்கு நஸ்ட ஈடுகள் மற்றும் வீடமைப்புத் திட்டங்கள்
- கல்முனையில் உள்ள நகர அபிவருத்தி உப அலுவலகமும் தேசிய
வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உப அலுவலகமும் கரையோர மாவட்ட அலுவலகமாக
தரமுயா்த்தப்படல் வேண்டும்.
-சாய்ந்தமருதில் மீன்பிடித்துறை முகம், ஜஸ் தொழிற்சாலை நிர்மாணிக்கப்படல் வேண்டும்.
- சாய்ந்தமருது தொட்டு காரைதீவு, நிந்தவூர்வரையிலான, தோணா மற்றும்
அதனிடையே வரும் பாலங்கள் மற்றும் இருமருங்கிலும் செப்பணிட்டு பூங்காங்கள் அமைத்து
அழகுபடுத்தப்படல் வேண்டும்.
- முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஸ்ரபின்
மரணத்தில் ஒழிந்துள்ள மர்மத்தை கண்டறிய விஷேட ஆணைக்குழு நியமிப்பதற்கு நடவடிக்கை
எடுக்கப்படல் வேண்டும்
0 comments:
Post a Comment