மருத்துவர்களின் தவறான சிகிச்சையால்
3 வயது குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்!

பிரித்தானியாவில் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கை விரல்கள் மற்றும் கால்களை இழந்த 3 வயது குழந்தைக்கு நேர்ந்த  விபரீத சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தெரியவருவதாவது,
பிரித்தானியாவை சேர்ந்தவர்கள் Lou Harvey-Smith. இவர்களுக்கு Reuben என்ற 3 வயது குழந்தை இருந்துள்ளது. அக்குழந்தைக்கு தீக்காயம் ஏற்பட்ட காரணத்தினால் கடந்த 2015 ஆம் ஆண்டு Suffolk பகுதியில் உள்ள Ipswich மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் அக்குழந்தைக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் திடீரென காய்ச்சல் ஏற்பட, பெற்றோர்கள் உடனே Ipswich மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் குழந்தைக்கு காய்ச்சல் தீர்ந்தபாடில்லை.
இதனால் பெற்றோர்கள் Chelsea மற்றும் Westminster என்ற மருத்துவமனைக்கு அழைத்து தங்கள் குழந்தையின் நிலை குறித்து விளக்கி அதற்கான காரணத்தை விசாரித்துள்ளனர்.
அங்குள்ள மருத்துவர்கள் குழந்தையின் இரத்தத்தில் நச்சுத்தன்மை கலந்திருப்பதாகவும், இதை உடனே எடுக்கவில்லை என்றால் குழந்தை உயிருக்கு ஆபத்து என தெரிவித்துள்ளனர்.
இதனால் அவர்கள் முன்னர் சிகிச்சை பெற்ற Ipswich மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்களோ இது தங்களால் பார்க்க முடியாது என கூறி Paddington பகுதியில் உள்ள St Mary's மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு குழந்தையின் உயிரை காப்பாற்ற வேண்டுமென்றால் நச்சுத்தன்மை பரவியுள்ள கைவிரல்கள் மற்றும் கால்களை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி அகற்றியுள்ளனர்.
இதனால் அவரது பெற்றோர்கள் தன் குழந்தையின் கால் மற்றும் கைவிரல்கள் பறிபோனதற்கு Ipswich மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் தான் காரணம் என கூறியுள்ளனர்.
அவர்கள் நினைத்திருந்தால் இதை ஆரம்பத்தில் சரி செய்திருக்கலாம். அவர்கள் அஜாக்கிரதை காரணமாக தான் குழந்தை கால் மற்றும் கைவிரல்கள் இழந்ததுள்ளான் என வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து Ipswich மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் குழந்தைக்கு நேர்ந்த இழப்பிற்கு மன்னிப்பு கோரிய மருத்துவமனை நிர்வாகம் இடைக்கால நிதியாக 50,000 பவுண்டு வழங்கவும் முன்வந்துள்ளது.

குழந்தை முழுமையாக குணமடையும் வரையில் தேவையான அனைத்து உதவிகளையும் மருத்துவமனையே ஏற்கும் எனவும் உறுதியளித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top