மாகாண ஆளுநர்களின் வயது 70 ஐ தாண்டி விட்டமையினால்
அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வது கடினமாம்
கவலைப்படும்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!
மாகாணங்களில்
உள்ள ஆளுநர்களில் பலரின் வயது 70 ஐ தாண்டி
விட்டமையினால் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வது கடினம்
என ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கிழக்கு
மாகாண ஆளுநர்
ஒஸ்டின் பெர்ணான்டோ,
வட மத்திய
மாகாண ஆளுநர்பி.பீ.திஸாநாயக்க,
வடமேல் மாகாண
ஆளுநர் அமர
பியசீலி ரத்னாயக்க,
சப்ரகமுவ மாகாண
ஆளுநர் மார்ஸல்
பெரேரா, ஊவா
மாகாண ஆளுநர்
எம்.பி.ஜயசிங்க மற்றும்
மேல் மாகாண
ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன்
ஆகியோர் 70 வயதைதாண்டிய ஆளுநர் பட்டியலில் உள்ளனர்.
இவர்களின்
பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என்பதால் நீக்குவதும்
சற்று கடினமாகவே
உள்ளது என
ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,
இந்த ஆளுநர்களில்
ஒருவரான பி.பீ.திஸாநாயக்க
அண்மையில் அனுராதபுரத்தில்
இடம்பெற்ற முதியோர்
தின நிகழ்வில்
கலந்துக் கொண்ட
போது மயங்கி
விழுந்து பின்னர்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment