விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டு தேசிய வாரம்


விளையாட்டுத்துறை அமைச்சினால் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டு தேசிய வாரம் எதிர்வரும் 6ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
நலம் ,மகிழ்ச்சி, வெற்றிக்கான விளையாட்டு என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் விளையாட்டுத்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டுத் தேசிய வாரம் 2017 பெப்ரவரி 6 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை நாடுபூராகவும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க அலுவலர்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம், இலங்கையில் அதிவேகமாக பரவுகின்ற தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக சிறப்பான ஆரம்பம் ஒன்றை வழங்குவதே இதன் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கமைய 2017 பெப்ரவரி 6 ஆம் திகதி விளையாட்டுத்துறை மற்றும் உடல்நல மேம்பாட்டு அரச, கூட்டுத்தாபன உத்தியோகத்தர்களின் தினம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான அரச அலுவலர்களினூடாக வினைத்திறனும், வினைத்திறனும் வாய்ந்த அரசாங்க சேவை ஒன்றை வழங்குவதை நோக்காகக் கொண்டு சகல அரசாங்க நிறுவகங்களிலும் 2017 பெப்ரவரி 6 ஆம் திகதி மு.. 8.30 மணிக்கு கீழ் குறிப்பிடப்படும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படல் வேண்டும்.
1.   சகல பணியாட் தொகுதியினரதும் முன்னே நிறுவன அல்லது அலுவலக தலைவர் தேசியக் கொடியை ஏற்றுதல்.
2.   தேசியக் கொடி ஏறப்பட்டதன் பின்னர் தேசியக் கீதம் இசைத்தல்.
3.   சுகதேசிகளான அரசாங்க அலுவலர்களினூடாக வினைத்திறனும், வினைத்திறனும் வாய்ந்த அரசாங்க சேவை ஒன்றை வழங்குவது குறித்து உடற்பயிற்சிகள் மற்றும் போசாக்கு என்பனவற்றின் முக்கியத்துவம் குறித்து சுருக்கமாக உரையாற்றுதல்.
4.   சகல பணியாட் தொகுதியினரும் அலுவலக உடையில் கல்ந்து கொள்ளக்கூடியவாறு இலகுவான உடற்பயிற்சி திட்டம் ஒன்றை (15 நிமிடம்) நடைமுறைப்படுத்தல்.
12ம் திகதி வரையில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வாரத்தின் இந்த வேலைத்திட்டத்தை நாடு முழுவதிலும் முன்னெடுக்கவுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top