இலங்கை அரச வலையமைப்பு வேலைத்திட்டத்தின்
இரண்டாவது கட்டத்தின் சேவைகள் வழங்கும்
ஒப்பந்தத்தை வழங்குவதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
அதிவேக மற்றும் பாதுகாப்பான இணைய இணைப்புக்களை அரச நிர்வனங்களுக்கு பெற்றுக் கொடுப்பதன் மூலம் பிரசைகளுக்கும், தொழில்களுக்கும் அரச சேவையினை தடையின்றி துரிதமாக பெற்றுக் கொடுக்கும் நோக்கில்,
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தினால் செயற்படுத்தப்படுகின்ற இலங்கை அரச வலையமைப்புக் கருத்திட்டம் (Lanka Government Network – LGN) வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் சேவைகள் வழங்கும் ஒப்பந்தத்தை,
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை குழுவின் சிபார்சின் அடிப்படையில் இலங்கை ரெலிகொம் நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பில் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பிரனார்ந்து அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment