பொலன்னறுவை மாவட்டத்தின் மெதிரிகியவில்
களஞ்சியசாலைத் தொகுதி நிர்மாணிப்பதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
விவசாயிகளுக்கு
உயர் தர
நன்மைகளை பெற்றுக்
கொடுக்கும் நோக்கில் கிளிநொச்சி, இரத்தினபுரி மற்றும்
பொலன்னறுவை மாவட்டங்களில் களஞ்சியசாலைகள்
03 இனை அமைப்பதற்கு
ஏற்கனவே அமைச்சரவை
அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனைடிப்படையில்,
பொலன்னறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்கு
பிரேரிக்கப்பட்டுள்ள 28,500 சதுர அடி
அளவிலான களஞ்சியசாலை
தொகுதியினை நிர்மாணிப்பதற்கும் மற்றைய அடிப்படை வசதிகளை
செய்து கொடுப்பதற்குமான
ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட
கொள்முதல் குழுவின்
சிபார்சின் பெயரில் வழங்குவதற்கு நிதியமைச்சர் ரவி
கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட
யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment