இது எப்படியிருக்கிறது?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27வது பேராளர் மாநாடு நேற்று 12 ஆம் திகதி
கொழும்பில் இடம்பெற்றபோது தொப்பி அணிந்த முஸ்லிம் அன்பர் ஒருவர் கட்சியின் தலைவர்
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அமர்ந்திருந்த இட்த்திற்குச் சென்று குந்தியிருந்தவராக
தலைவரின் காலைப் பிடிக்கிறார்.
இவரின் இச்செயலை தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களும்
தடுக்கவில்லை குர்ஆனை சுமந்துள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்
அவர்கள் கூட தடுக்கவில்லை.
அந்த அப்பாவி மானிடன் செய்யும் அந்த பணிவான காரியத்தை அரசர் போன்று தலைவரும் சிற்றரசர் போன்று ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களும்
தடுக்காமல் ஏற்றுக்கொண்டவர்கள் போல் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஜெயல்லிதா முதலமைச்சராக பதவி வகித்த
காலத்தில் இப்படியான காட்சிகளை மக்கள் காணக்கூடியதாக இருந்த்து என நடுநிலையாளர்கள்
கருத்து தெரிவித்து வருகின்றனர்.

0 comments:
Post a Comment