உள்ளூராட்சி மன்றத்தேர்தல்
பழைய முறையில் நடத்தப்பட வேண்டும்
-
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம்
உள்ளூராட்சி
மன்றத்தேர்தல் பழைய முறையில் நடத்தப்பட வேண்டுமென
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப்
ஹக்கீம் கோரியுள்ளார்.
கொழும்பு
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று
நடைபெற்ற கட்சியின்
மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர்
மேலும் கூறுகையில்,
எல்லை
நிர்ணய பிரச்சினைகளை
காரணம் காட்டி
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை காலம் தாழ்த்துவது
பொருத்தமற்றது.
எல்லை
நிர்ணய அறிக்கை
தொடர்பில் எல்லை
நிர்ணயக்குழுவின் தலைவருக்கும் துறைசார் அமைச்சருக்கும் இடையில்
முரண்பாட்டு நிலைமை காணப்படுகின்றது.
ஏற்கனவே
தேர்தல் நடத்தப்பட
வேண்டிய காலம்
ஒன்றரை ஆண்டுகளில்
காலம் தாழ்த்தப்பட்டுள்ளது.
இது மக்களின்
ஜனநாயக உரிமைகளை
மீறும் செயலாகவே
கருதப்பட வேண்டும்.
ஏற்கனவே
நடைபெற்ற முறையில்
தேர்தல் நடத்துவதில்
எவ்வித சிக்கல்களும்
கிடையாது. எல்லை
நிர்ணய விடயத்தை
பிடித்துக் கொண்டே காலத்தை கடத்துவது பொருத்தமற்றதாகும்
என அவர்
குறிப்பிட்டுள்ளார்.



0 comments:
Post a Comment