சிறைச்சாலைகளின் இடநெரிசல் மற்றும்
சிறைச்சாலைகள் மறுசீரமைப்புக்களுக்காக
அமைச்சரவை அங்கீகாரம்
சிறைச்சாலைகளின் இட நெரிசல் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்புக்களுக்காக நீதிமன்ற மற்றும் சட்டமுறையான காரணங்கள் தொடர்பில் ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட செயலணியின் முதலாம் அறிக்கையில் பின்வரும் சிபார்சுகள் முன்வைக்கப்பட்டன.
• சிறைத்தண்டனைக்கு பதிலாக சமூகம் சார்ந்த தண்டனை முறைகளை பயனுள்ள விதத்தில் பயன்படுத்தல்
• தண்டப்பணங்களை செலுத்துவதற்கு முடியாது போகும் பிரஜைகளுக்கு சிறைத்தண்டனை வழங்குவதற்கு பதிலாக கட்டம் கட்டமாக குறித்த தண்டப்பணத்தை செலுத்தும் வகையில் குறித்த சட்டத்தில் உள்ள விதிவிதானங்களை முழுமையாக செயற்படுத்தல்.
• நீதவான் நீதமன்றங்களுக்கு அதிகாரமற்ற வழக்குகளை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கும் வரை நீதவான் நீதிமன்றத்திலேயே வைத்திருப்பதற்கும் குறித்த செயற்பாட்டின் போது வழக்குகள் காணாமல் போவதை தடுப்பதற்காக வேண்டி தகவல் முறைமையொன்றை செயற்படுத்தல்.
• குற்றப்பத்திரிகையின்றி சிறைப்பிடிக்கப்பட்டுள்ளவர்களை முறிகளின் அடிப்படையில் விடுவித்தல் மற்றும் சட்டத்தின் விதிகளின் படி நீதவான் நீதிபதிகள் மாதத்துக்கு ஒருமுறை சிறைச்சாலைகளை பார்வையிடுதல்.
• பிணையில் விடுவிப்பதற்கு முடியுமான குற்றங்கள் தொடர்பில் பொலிஸ் பிணை பெற்றுக் கொடுக்கும் முறையினை பின்பற்றல்.
• மரண தண்டனையினை சாவும் வரையான சிறைத்தண்டனையாக குறைப்பதற்காக காணப்படும் வாய்ப்புக்களை பரிசீலித்தல்
• புதிய சிறைச்சாலைகளை நிர்மாணித்தல் மற்றும் மறுசீரமைப்பு செய்தல்
• சிறைச்சாலை ஊழியர்களுக்கு பாதுகாப்பான மற்றும் உரிய சூழலை செய்து கொடுத்தல்
குறித்த அறிக்கையினை பாராளுமன்றத்தில் முன்வைப்பது தொடர்பில் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:
Post a Comment