ஜெயலலிதா,சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில்
நாளை (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு
ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வரலாம் என தெரிகிறது.
தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் குன்கா தலைமையிலான சிறப்பு கோர்ட் ஜெயலலிதா., சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இதில் 4 பேரையும் ஐகோர்ட் விடுவித்தது. இதனை தொடர்ந்து கர்நாடக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு மீதான தீர்ப்பு நாளை வெளியாகும் என கோர்ட் வட்டாரம் தெரிவிக்கிறது. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவும் சூழலில், இந்த தீர்ப்பை பொறுத்து மேலும் பரபரப்பு தொற்றிக்கொள்ளும் எனக் கூறப்படுகின்றது.

0 comments:
Post a Comment