முதலமைச்சராக எனக்கு விருப்பமில்லை:
சசிகலா பரபரப்பு பேட்டி
எதிர்ப்பை சமாளிக்க 'திடீர்' வியூகம்
முதல்வர் பதவிக்கு நான் ஆசைப்பட்டது கிடையாது. நான் நினைத்திருந்தால் ஜெயலலிதா இறந்த அன்றே முதலமைச்சராகியிருக்க முடியும்' -இன்று போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு திரண்டிருந்த கூட்டத்திற்கு மத்தியில்தான் சசிகலா இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
போயஸ் கார்டனில் பேசிய சசிகலா கூறியதாவது, அதிமுகவை பிரித்தாள சதி நடக்கிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த அன்றே அதிமுகவை பிரிக்க நினைத்தார்கள்.
ஜெயலலிதா இறந்த அன்று இரவே ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக பதவியேற்கவும், ஏற்கனவே இருந்த அமைச்சரவையையே தொடர வேண்டும் என நான் தான் சொன்னேன்.
ஆனால், நீங்கள் தான் முதலமைச்சராக வேண்டும் என எல்லோரும் என்னை வலியுறுத்தினார்கள். ஜெயலலிதா இறந்த துக்கத்தில் முதலமைச்சராக எனக்கு விருப்பமில்லை.
ஆனால், தற்போது நிலை மாறியுள்ளது. எம்ஜிஆரை நீக்கிய திமுகவிடம் முதலமைச்சர் ஓ.பி.எஸ் சட்டசபையில் சிரித்து பேசியதாக எம்.எல்.ஏ.க்கள் அப்போதே புகார் அளித்தார்கள்.
அதனால், தான் நான் முதல்வராக முடிவுசெய்தேன். நான் நினைத்திருந்தால் ஜெயலலிதா இறந்த அன்றே முதலமைச்சர் ஆகியிருக்கலாம், ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை.
அதிமுக அரசு அமைய உயிரையும் விட தயார். எத்தனை ஆண்கள் எதிர்த்தாலும் ஒரு பெண்ணாக எதிர்த்து நிற்பேன். எத்தனை எதிரிகள் வந்தாலும் சமாளிக்கும் திறன் நம்மிடம் உள்ளது என தொண்டர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.
' மத்திய அரசின் அழுத்தத்தை அடுத்து, முதல்வர் பதவிக்கு கட்சியின் சீனியர்களை முன்னிறுத்தும் வேலைகளைத் தொடங்கிவிட்டார்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.
அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், முதல்வராக முன்னிறுத்தப்பட்டார் சசிகலா. அடுத்த இரண்டே நாளில், 'என்னை மிரட்டி ராஜினாமா கடிதத்தை வாங்கிவிட்டனர்' என பகிரங்கமாக குற்றம் சாட்டினார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இதையடுத்து, எம்.எல்.ஏக்களை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் தங்க வைத்தார் சசிகலா. ' சட்டசபையில் எனக்குத் தனி மெஜாரிட்டி உள்ளது. என்னைப் பதவியேற்க அழைப்பு விடுங்கள்' ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கோரிக்கை மனு அளித்தார். ஓ.பன்னீர்செல்வமும் ஆளுநரிடம் தனியாகக் கடிதம் ஒன்றை அளித்தார். கடந்த ஐந்து நாட்களாக அதிகாரத்தை மையமாக வைத்து நடக்கும் போட்டியில், ஆளுநரின் கருத்து என்ன என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. இந்நிலையில், இன்று போயஸ் கார்டனில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய சசிகலா,
" முதலமைச்சர் ஆக வேண்டும் என ஒரு நொடிகூட நான் எண்ணியதில்லை.
எம்.ஜி.ஆர் இறந்த போது அவரது இறுதி ஊர்வல வண்டியில் ஏற விடாமல் ஜெயலலிதாவைத் தடுத்து
தள்ளிவிட்டபோது, அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார். அரசியலை விட்டே ஜெயலலிதா விலகலாம்
என்று நினைத்தார். அதை பலமுறை என்னிடம் ஜெயலலிதா கூறியுள்ளார். நான்தான் அவருக்கு ஊக்கம்
கொடுத்து அரசியலில் தொடர வைத்தேன். ஒரு பன்னீர்செல்வம் அல்ல, ஆயிரம் பன்னீர் செல்வத்தை
நான் பார்த்திருக்கிறேன். 33 ஆண்டுகளாக நான் ஜெயலலிதாவுடன் இருந்ததால் பயமே இல்லாமல்
போனது. தி.மு.க.வுடன் பன்னீர்செல்வம் மிகவும் இணக்கமாக சென்றது தவறாக தோன்றியது. அந்த
காரணத்தினாலேயே நான் முதல்வராக முடிவு செய்தேன்' என மனம் திறந்து பேசியுள்ளார்.



0 comments:
Post a Comment