ஐந்து நாள்களுக்கு பிறகு தலைமைச் செயலகம் சென்ற
தமிழக முதல்வரின் முதல் கடமை!
ஐந்து நாள்களுக்கு பிறகு இன்று தலைமைச் செயலகம் சென்ற தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட
சிறுமி ஹாசினி குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு
காரணமாக ஐந்து நாள்களுக்குப் பிறகு முதல்வர் பன்னீர்செல்வம் இன்று தலைமைச் செயலகம்
சென்றார். அங்கு, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் ஜெ.கணேசன், தமிழ்நாடு
தலைமைச் செயலக அலுவலர்கள் சங்கத்தின் செயலாளர் டி.கபிலன், சங்க நிர்வாகிகள் மற்றும்
அரசு அலுவலர்கள் சந்தித்து அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட
சிறுமி ஹாசினி குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார் முதல்வர்
பன்னீர்செல்வம்.

0 comments:
Post a Comment