“பசீரிடமிருந்து தட்டிப் பறித்த தவிசாளர் பதவியில்,

நான் ஒரு போதும் அமர மாட்டேன்ஹசனலி மறுப்பு

கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாமல்

மீண்டுமொரு தடவை அவர் ஏமாற்றப்பட்டுள்ளார்!


முஸ்லிம் காங்கிரஸின் அதிகாரம் மிக்க செயலாளராக ஹசனலியை மீண்டும் நியமிப்பேன் என்று, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதி வழங்கியிருந்த நிலையில், நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மீண்டுமொரு தடவை ஹசனலி ஏமாற்றப்பட்டுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் நிருவாகத்தைத் தெரிவு செய்தல் மற்றும் யாப்புத் திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளின் பொருட்டு, நேற்று 11ஆம் திகதி சனிக்கிழமை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில், அந்தக் கட்சியின் கட்டாய உயர்பீடக் கூட்டம் நடத்தப்பட்டது.
கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம், முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பதவியினைப் பொறுப்பேற்குமாறு வலியுறுத்தியதோடு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
 பசீரிடமிருந்து தட்டிப் பறித்த தவிசாளர் பதவியில், நான் ஒரு போதும் அமர மாட்டேன்என்று கூறிய ஹசனலி; ‘ஹக்கீம் கூட்டத்தாரின்  கோரிக்கையினை நிராகரித்து விட்டார் என தெரியவருகிறது.
இந்தக் கூட்டத்தில் செயலாளர் மற்றும் தவிசாளர் தவிர்ந்த மற்றைய அனைத்துப் பதவிகளுக்கும், அந்தப் பதவிகளை வகித்த நபர்களே மீண்டும் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில்ஹசனலி வகித்து வந்த செயலாளர் நாயகத்தின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அந்தப் பதவிக்கான அதிகாரங்கள் அனைத்தினையும் வழங்கி, செயலாளர் நாயகமாக ஹசனலியை நியமிப்பேன் என்று சுன்னத் தொழுகை தொழுத பின்னர் ஹக்கீம் ஹஸனலியிடம் வாக்குறுதி வழங்கியிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முஸ்லிம்.காங்கிரஸி.ன் வளர்ச்சிக்காக மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களோடு   பாரிய பங்களிப்புக்களைச் செய்துள்ளளதுடன், அந்தக் கட்சிக்குள் தவிர்க்க முடியாததொரு அடையாளமாகவும் இருந்து வரும் ஹசனலி திட்டமிட்டு தற்போதய கட்சியின் உயர்பீடத்தால் ஏமாற்றப்பட்டிருப்பதாக பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். 

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top