அரசியல் பழிவாங்கல் காரணமாக
பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தவர்களுக்கு
சலுகைகள் வழங்குவதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
2015.04.17ம் திகதிய 09/2015 இலக்கமுடைய அரசாங்க
நிர்வாக சுற்றறிக்கையின்
ஏற்பாடுகளிற்கு ஏற்ப அரசியல் பழிவாங்களினால் பாதிக்கப்பட்டவர்களிடம்
இருந்து கிடைக்கப்பெற்ற
மொத்த மேன்முறையீடுகள்
31,666 மேன்முறையீடுகளில் 23,093 மேன்முறையீடுகள் தொடர்பான
சிபார்சுகளிற்கு 03 கட்டங்களின் கீழ்
அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டது. மிகுதியான 8,573 மேன்முறையீடுகளில்
06 அமைச்சுகளுக்கு உரித்தான 3,440 மேன்முறையீடுகள்
தொடர்பான சிபார்சுகளை
உரிய நிர்வாக
அதிகாரிகளின் ஊடாக செயற்படுத்துவது தொடர்பில் அரசாங்க
நிர்வாக மற்றும்
முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார அவர்களினால்
முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:
Post a Comment