சசிகலா கோரிக்கை நிராகரிப்பு!

உடனடியாக சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு



சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா ட்பட  மூன்று பேர், பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய அவகாசம் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. உடனடியாக சரணடைய வேண்டும் என அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் நேற்று உறுதிப்படுத்தியது. மேலும், மூன்று பேரும் உடனடியாக விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய இரண்டு வாரம் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் சசிகலா ட்பட மூன்று பேர் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், உடல் நிலையை கருத்தில் கொண்டு அவகாசம் அளிக்க வேண்டும் என்றும், தீர்ப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.


இந்த கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என திட்டவட்டமாக கூறியதோடு, உடனடியாக பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top