கரவாகு இலக்கியச் சந்தி வழங்கும்
‘சோலைக் கிளி’ விருதுகள்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கரவாகு
இலக்கியச் சந்தி
ஏற்பாடு செய்த
2015இல் வெளிவந்த கவிதை நூற்களில் சிறந்த
நூலைத் தெரிவு
செய்வதற்கான போட்டியில் முதல் பரிசான 15,000 ரூபாய்
பணப்பரிசு, ‘சோலைக்கிளி’ விருது மற்றும் சான்றிதழை
மன்னார் அமுதன்
எழுதிய ‘அன்ன
யாவினும்’ என்ற
கவிதை நூல்
தட்டிச்செல்கிறது.
இந்நூற்களில்,
பாராட்டுப் பரிசும் மற்றும் சான்றிதழும் முறையே
சு.தவச்செல்வன்
(டார்வினின் பூனைகள்), ஏ.கே.முஜாரத்
(சாத்தான் வழிந்தோடும்
சொற்கள்), தம்பிலுவில்
ஜெகா (விடை
தேடி), பாலமுனை
முபீத் (உடைந்த
கால்கள்), ஓட்டமாவடி
றியாஸ் முஹம்மத்
(முகவரி இழந்த
முச்சந்தி) என்ற 5 கவிஞர்களின் நூல்களுக்கு கிடைத்திருக்கின்றது.
‘சோலைக்கிளி’
விருது விழாவிற்கு
ஆர்வத்துடன் கவிதை நூல்களை அனுப்பிய ஏனைய
அனைத்து கவிஞர்களுக்கும்
கரவாகுச் சந்தி,
சிறப்புச் சான்றிதழ்களை
வழங்கவுள்ளது.
விழா
எதிர்வரும் (25) சனிக்கிழமை காலை 9.15 இற்கு மாளிகைக்காடு
சபீனா முஸ்லிம்
வித்தியாலயத்தில் நடைபெறும்.

0 comments:
Post a Comment