சிறையில் வீட்டு சாப்பாடு, மினரல் வாட்டர்
வழங்க சசிகலா கோரிக்கை
சொத்துக்
குவிப்பு வழக்கில்
4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள அதிமுக
பொதுச் செயலர்
சசிகலா, தனக்கு
சிறையில் வீட்டு
சாப்பாடும், மினரல் வாட்டரும் வழங்கும்படி கோரிக்கை
வைத்துள்ளார்.
அவர்
தரப்பில் சிறையில்
தனக்கு வழங்கப்பட
வேண்டிய வசதிகள்
குறித்து கோரிக்கைக்
கடிதம் வைக்கப்பட்டது.
அதில்,
தனக்கு நீரிழிவு
நோய் இருப்பதால்
வீட்டில் சமைக்கப்பட்ட
உணவை கேட்டுள்ளார்.
மேலும், குடிக்க
மினரல் வாட்டர்,
வெஸ்டர்ன் டைப்
கழிவறை, 24 மணி நேரமும் சுடுநீர் போன்றவை
தனது அறையில்
கிடைக்க வசதி
செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது.
சசிகலா
அடைக்கப்பட உள்ள அறையில் கட்டிலும் டிவியும்
இருக்கும். அவருக்கு உணவு தயாரிக்க உதவியாளர்
ஒருவர் நியமிக்கப்படுவார்
என்றும் செய்திகள்
தெரிவிக்கின்றன.

0 comments:
Post a Comment