மேற்கு லண்டனில் எரியும் கட்டடத்தில் சிக்கித் திணறின மக்கள், தீயில் இருந்து தப்பிப்பதற்கு மிகப்பெரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

இதுவரை வெளியான தகவல்களுக்கு அமைய அனர்த்தம் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். 68 பேர் ஆறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனர்த்தம் இடம்பெற்ற 27 மாடி கட்டடத்தில் இருந்து குதிக்கும் அதிர்ச்சி காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

வெளியாகியுள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளிகளுக்கமைய குறைந்தது 6 விரிப்புகளை ஒன்றாக கட்டி மாடிகளின் ஜன்னல்களில் இருந்து குதிக்க முயற்சித்துள்ளனர்.

மற்றொரு வீடியோவில் மாடிக்கு வெளியே தங்கள் உறவினர்கள் குதிக்கும் போது அவர்களை தாங்கி பிடிப்பதற்கு ஆயத்தமாகியுள்ளனர்.
அங்கு 22வது மாடியில் இருந்து சிறுவன் தீ காயங்களுடன் குதிக்கும் காட்சியை தான் அவதானித்ததாக நபர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்ட போது தீயனைப்பு பிரிவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் 20 நிமிடங்கள் தாதமாகவே தீயணைப்பு பிரிவினர் அங்கு சென்றுள்ளதாக பெயர் குறிப்பிடப்படாத நபர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அரை மணி நேரத்திற்கு பின்னர் 22 மாடியில் இருந்து தீ காயங்களுடன் சிறுவன் ஒருவன் ஜன்னல் அருகில் நடந்து வந்து குதித்த சம்பவத்தை அவதானித்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஏற்பட்ட இந்த விபத்தில் இன்னும் பல மக்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிட்டத்தட்ட 600 பேர் அந்த குடியிருப்பு தொகுதியில் வாழ்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் அந்த கட்டடத்தில் கைவிட்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் 21வது மாடியில் இருந்து 6 பிள்ளைகளுடன் பெண் ஒருவர் தப்பி செல்வதற்கு முயற்சித்துள்ளார். எனினும் இறுதியில் அந்த குடும்பத்தை சேர்ந்த இருவர் காயமடைந்துள்ளார்.

அங்கு அதிகமான மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு ஆணையர் Dany Cotton செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தங்கள் குழந்தைகளை காப்பாற்ற மக்கள் கூச்சலிட்டவாறு ஓட ஆரம்பித்துள்ளனர். மற்றொரு பெண் தான் தப்பிப்பதறகு இறந்த ஒருவரின் உடலை பிடித்து கொண்டு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மற்றொரு பெண் தனது குழந்தையை காப்பாற்றுவதற்காக 10வது மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளதாகவும் வெளியே இருந்தவர்கள் குழந்தையை பிடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top