இந்த தீ விபத்தில் இதுவரை வெளியான தகவல்களுக்கு அமைய 12 பேர் உயிரிழந்துள்ளனர். 68 பேர் ஆறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனர்த்தம் இடம்பெற்ற 27 மாடி கட்டடத்தில் இருந்து குதிக்கும் அதிர்ச்சி காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகி உள்ளன.
வெளியாகியுள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளிகளுக்கமைய குறைந்தது 6 விரிப்புகளை ஒன்றாக கட்டி மாடிகளின் ஜன்னல்களில் இருந்து குதிக்க முயற்சித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த பலர் காணாமல் போயிருப்பதாகவும், அவர்களை தீயணைப்பு படையினர் தேடிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விபத்தின் போது உள்ளூர் நேரப்படி சரியாக விடியற் காலை 2.54 மணி அளவில் Rania Ibraham (30), என்பவர் தன்னுடைய தோழியான Yaz-ற்கு ஒரு தகவல் அனுப்பியுள்ளார்
மன்னித்து விடுங்கள், நான் விடைபெறுகிறேன் (Good Bye) என்று செய்தி அனுப்பியுள்ளார். இதைக் கண்ட அவரது தோழி உணர்ச்சி தாங்கமுடியாமல் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், Rania Ibraham-க்கு 5-வயதில் பையன் மற்றும் 3-வயதில் மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவள் அங்குள்ள கட்டிடத்தின் 23-வதும் மாடியில் வசித்து வருகிறார்.
இந்த தீ விபத்து சம்பவத்தால், அவள் தனக்கு ஒரு செய்தி அனுப்பினாள் அதைக் கண்டதும், தன்னால் அழாமல் இருக்க முடியவில்லை.
அதில் மன்னித்து விடுங்கள், நான் விடைபெறுகிறேன் என்று அனுப்பினால். அதன் பின் அவளைத் தொடர்பு கொண்ட போது நெட்வர்க் பிரச்சனை காரணமாக அவளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
தன்னுடைய உயிர் நண்பி அவள், அவளுக்காக பிரார்த்தனை செய்து கொள்கிறேன். அவளுக்கு எதுவும் ஆகக் கூடாது என்று கண்ணீர் மல்க கூறினார். ஆனல் தற்போது வரை Rania Ibraham பற்றி எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லையாம்.
0 comments:
Post a Comment