இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ள அனர்த்த பாதிப்புக்கள்
பாதிக்கப்பட்ட மக்களுக்கென நிதியுதவி மற்றும்
நிவாரணப் பொருட்களையும் கையளித்தார்
இரத்தினபுரி ஸ்ரீபோதி ராஜ ராமய விகாரைக்கு விஜயம் செய்த அமைச்சர்
றிஷாட் பதியுதீன் விகாரையின்
விகாராதிபதியுடன் வெள்ள அனர்த்த பாதிப்புக்கள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன் பாதிக்கப்பட்ட
மக்களுக்கென நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்களையும் கையளித்தார்.
இரத்தினபுரி மாவட்டத்திற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அனர்த்த நிவாரணத்துக்கான அமைப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிஷாட் பதியுதீன் நேற்று 3 ஆம் திகதி அம்மாவட்டத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச்
சந்தித்தார்.
இரத்தினபுரி ஸ்ரீபோதி ராஜ ராமய விகாரைக்கு விஜயம் செய்த அமைச்சர் றிஷாட் பதியுதீன், அவ் விகாரையின் விகாராதிபதியுடன் வெள்ள அனர்த்த பாதிப்புக்கள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கென நிதியுதவி மற்றும் சமையலறை உபகரணங்கள் அடங்கிய நிவாரணப் பொருட்களையும் கையளித்தார்.
அமைச்சர் றிஷாட் பதியுதீன் பாதிக்கப்பட்ட மக்களின் அனைத்து விபரங்களையும், சேத விபரங்களையும் அங்கு கோரியதுடன் மீள் கட்டமைப்பு தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்தும் அம்மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.
அமைச்சர் றிஷாட் பதியுதீன் இரத்தினபுரி ஜன்னத் ஜும்ஆ பள்ளிவாயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்களைச் சந்தித்து கலந்துரையாடி அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்தார்.
இந்த சந்திப்பின் போது அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஏ.ஏம் ஜெமீல், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் தலைவர் றிஸ்வான், உப்புக்கூட்டுத்தாபனத் தலைவர் அமீன்; அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்ஷாட் ரஹ்மத்துல்லாஹ் உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள மற்றும் மண் சரிவு பாதிப்புக்களை ஆராயும் உயர்மட்ட மாநாடு ஒன்றும் பிரதேச செயலகத்தில் நேற்று3 ஆம் திகதி நடைபெற்றது. அம்மாநாட்டிலும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டில் அமைச்சர்களான மனோ கணேசன், ஜோன் செனவிரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் விஜேதுங்க மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment