திகாமடுல்ல மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகள்
எம்.பிக்களில் சிறப்பாக செயற்பட்டுள்ளவர்கள் தொடர்பில்
வெளியிடப்பட்டுள்ள பட்டியல் பேசுகின்றது
திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு மக்கள்
பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் சென்றுள்ள முஸ்லிம் காங்கிரஸ் சார்பான மூன்று எம்.பிக்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளது
என்பதை அவர்களுக்கு வாக்களித்த மக்கள் அறிந்து கொள்வதற்காக நாடாளுமன்றில் உள்ள எம்.பிக்களில் சிறப்பாக செயற்பட்டுள்ளவர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயம், பெருந்தோட்டத் துறை, கால்நடை மற்றும் மீன்பிடி, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல், நல்லிணக்கம் மற்றும் மீள்குடியேற்றம், வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நலனோம்புகை மற்றும் சமூக சேவை, நீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம், தேசிய பாரம்பரியம், ஊடகம் மற்றும்
விளையாட்டு, பொருளாதாரம் மற்றும் நிதி, கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு, தொழிநுட்பம், தொடர்பாடல்
மற்றும் எரிசக்தி, ஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம், சுகாதாரம்,
நகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து, உரிமை மற்றும் பிரதிநிதித்துவம் என்பனவற்றில் மக்கள்
பிரதிநிதிகள் செலுத்திய அக்கறை, செயல்பாடுகளுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
வாக்களித்த மக்களே!
திகாமடுல்ல மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் மேற்கூறப்பட்ட விடயங்களில் எவ்வாறு அக்கறை செலுத்தியுள்ளார்கள் அவர்கள் பெற்ற புள்ளிகள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
மக்கள் விடுதலை முன்னணி (JVP) பிரதிநிதி அநுர குமார திஸ்ஸநாயக்க எவ்வாறு சகல விடயங்களிலும்
அக்கறை செலுத்தியுள்ளார் என்பதையும் ஒப்பிட்டுப்பாருங்கள்
இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) தலைவரும் கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சருமான றிஷாட் பதியுதீன் வர்த்தகம் மற்றும் தொழில் துறை விடயத்தில் 99 புள்ளிகளைப் பெற்று சிறப்பாக செயலாற்றியுள்ளார் என நாடாளுமன்றில் உள்ள எம்.பிக்களில் சிறப்பாக செயற்பட்டுள்ளவர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் உள்ள எம்.பிக்களில் சிறப்பாக செயற்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அப்பட்டியலிலேயே இவ்விபரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
0 comments:
Post a Comment