அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக
சீன பௌத்த சங்கம் நிதி அன்பளிப்பு
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சீன பௌத்த சங்கம் 22 மில்லியன் ரூபா நிதி அன்பளிப்பை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளித்தது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் sri guanguan தேரர் உள்ளிட்ட சீன பௌத்த சங்கத்தின் தேரர்கள் இந்த நிதி அன்பளிப்பினை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
சீன அரசாங்கமானது தொடர்ச்சியாக இலங்கைக்கு வழங்கிவரும் இத்தகைய ஒத்துழைப்புக்களினால் இருநாட்டிற்கும் இடையிலான நீண்டகால தொடர்புகள் மேலும் விருத்தி அடைகின்றதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கை அனர்த்தங்களை சந்திக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சீன அரசாங்கம் உதவிகளை வழங்குவதையிட்டு தனது நன்றியைத் தெரிவித்தார்.
அதேபோல் சர்வதேச ரீதியில் கிடைக்கும் நிதி உதவிகளும் சீன அரசாங்கத்தின் நிதி உதவிகளும் சீரற்ற காலநிலையால் அனர்த்தத்திற்குள்ளாகி வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக உபயோகப்படுத்தப்படுமென கூறிய ஜனாதிபதி , சீன பௌத்த சங்கத்தின் தேரர்கள் மீண்டும் இலங்கைக்கு வருகை தரும் சந்தர்ப்பத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட வசதிகளை ஏற்படுத்துவதாகவும் இதன்போது உறுதி கூறினார்.
இந்த நிகழ்வில் பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வண. கல்லேல்லே சுமனசிறி தேரரும் , அமைச்சர் மஹிந்த சமரசிங்க உள்ளிட்ட குழுவினர் பங்குபற்றினர்.
0 comments:
Post a Comment