கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்!

கவிக்கோ அப்துல் ரகுமான் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை சென்னையில் காலமானார்.
1937 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி பிறந்த கவிக்கோ, 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்து இயங்கிவந்தவர். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம்பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களைப் புனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறைக் கவிஞர்களுக்கு ஆசானாகவும் இவர் விளங்கினார்.
 80 வயதாகிய இவருக்கு, சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் 2 மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், இன்று அதிகாலை சென்னையில் காலமானார். 1999-ம் வருடம் 'ஆலாபனை' கவிதைக்காக சாகித்ய அகாடமி விருது வென்ற அப்துல் ரகுமான், தி.மு. ஆட்சி காலத்தில்2009 மே முதல் 2011 வரை வக்பு வாரியத் தலைவராகவும் இருந்துள்ளார்.
சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அதன் இயக்குநராகப் பணியாற்றிய . வே. சுப்பிரமணியத்தை வழிகாட்டியாகக் கொண்டு புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 20 ஆண்டுகள் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றினார்.

இவர் பால்வீதி, நேயர் விருப்பம் உள்ளிட்ட கவிதைகளையும், கரைகளே நதியாவதில்லை போன்ற பல்வேறு கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். 1999-ம் ஆண்டு ஆலாபனை கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றிருந்தார். மேலும் இவர் தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட 14 விருதுகளை பல்வேறு அமைப்புகளால் வென்றிருக்கிறார். ஹைக்கூ, கஜல் உள்ளிட்ட பிறமொழி இலக்கியங்களை தமிழில் புனைந்திருக்கிறார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top