ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், கொழும்புக்கு இன்று (15) அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு-07 இல் உள்ள அவருடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்றிரவு இடம்பெறும் விசேட கலந்துரையாடலுக்கே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கூட்டம், கட்டாயமானது என்றும், சகலரும் பங்கேற்க வேண்டுமென, அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. இதில், கட்சியின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்று கட்சி தலைமையகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய அரசியலமைப்பு தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் தயாரிக்கப்பட்ட யோசனைகள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படும் என்றும் அறியமுடிகின்றது.
அத்துடன், ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடையும், ஐக்கிய தேசியக் கட்சி- ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணைந்து ஏற்படுத்தியுள்ள இணைந்த ஆட்சியை, முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பில் விரிவாக ஆராயப்படும் என்றும் அறியமுடிகின்றது.
0 comments:
Post a Comment