சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினூடாக
வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளில்
துப்பரவு செய்யும் பணிகளும்
ஜி.முஹம்மட்
றின்ஸாத்
சாய்ந்தமருது
பிரதேச செயலகத்தினூடாக இளைஞர்களின்
அர்ப்பணிப்புடன் கடந்த 4 நாட்களாக சேகரித்த பொருட்களை
வகைப்படுத்தி பொதியிட்டு பகிர்தளித்தல் போன்ற பணிகளில் இறுதியாக நடைபெற்ற பகிர்தளிப்பு
பணிகளை இளைஞர்கள்
அர்ப்பணிப்புடன் செயற்பட்டு முஸ்லிம்களிடத்தில்
2/3 பகுதியையும், சகோதர இனத்திற்கு 1/3 பகுதியையும் பகிர்தளித்து நிவாரணப்
பணியை
மேற்கொண்டார்கள்.
பொதுமக்கள்
இளைஞர்களை நம்பி
அமானிதமாக வழங்கிய
நிவாரணப் பொருட்கள்
அதேபோன்று பணம் என்பவற்றை இளைஞர்கள்
அனைவரும் பல
சிரமங்களுக்கு மத்தியிலும் பல அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டு உண்மையாக பாதிப்படைந்த மக்களிடம்
சென்று அவர்களிடம்
பகிர்தளித்தார்கள்.
அந்தவகையில்
இவ் வெற்றிக்காக
உதவிய அல்லாஹுதலாவுக்கு
இளைஞர்கள் நன்றியை தெரிவிக்கின்றார்கள்.
அடுத்து
அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இளைஞர்கள்,பிரதேச செயலாளர்,
பிரதேச செயலக
ஊழியர்கள், ப.நோ.கூ தலைவர்
அனைவருக்கும் பொதுவான நன்றிகளையும் தெரிவித்துள்ளார்கள்.
குறிப்பு
: நிவாரணப் பணிகள் மூலம் வந்த வருமானங்கள்,
ஏற்பட்ட செலவுகள் அனைத்தும் தொடர்பான அறிக்கைகளை பிரதேச செயலாளரிடம் ஒப்படைத்த பின் பிரதேச செயலக அறிவித்தல் பலகையிலும்,சாய்ந்நமருது பள்ளிவாசல்களில் காணப்படுகிறன்ற அறிவித்தல் பலகைகளிலும் மக்களின் பார்வைக்காக காட்சியளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்..
"எல்லாவற்றையும் அல்லாஹ் நன்கறிந்தவன்."
0 comments:
Post a Comment