இரத்தினபுரி ரட்ணேஸ்வரம் சிவன் கோவிலுக்குச் சென்ற

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான

நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்களைக் கையளித்தார்

இரத்தினபுரி ரட்ணேஸ்வரம் சிவன் கோவிலுக்கு நேற்று பிற்பகல் விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், அக் கோவில் நிர்வாகத்திடம் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்களைக் கையளித்தார்.
இரத்தினபுரி மாவட்டத்திற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அனர்த்த நிவாரணத்துக்கான அமைப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிஷாட் பதியுதீன் நேற்று 3 ஆம் திகதி அம்மாவட்டத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார்.

இந்நிகழ்வில் அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஏ.ஏம் ஜெமீல், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் தலைவர் றிஸ்வான், உப்புக்கூட்டுத்தாபனத் தலைவர் அமீன்; அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்ஷாட் ரஹ்மத்துல்லாஹ் உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top