பல்வேறு வகையிலும் சேதப்படுத்தப்பட்ட இலங்கை நாணயத் தாள்களை இவ்வருடம் முடிவதற்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி பொது மக்களைக் கேட்டுள்ளது.
எதிர்வரும்
2017.12.31 வரையில் இதற்காக மத்திய வங்கி காலக்கெடு விதித்துள்ளது.
நாணயத் தாள்களில் எழுதி சேதப்படுத்தல், அதில் மாற்றம் செய்தல், கிழித்தல் மற்றும் உருச்சிதைத்தல் என்பன 1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
இதற்காக சிறைதண்டனை, அபராதம் அல்லது இரண்டு விதமான தண்டனைகளையும் வழங்குவதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து விலகியிருக்குமாறு இலங்கை மத்திய வங்கி பொது மக்களை கேட்டுள்ளது.
0 comments:
Post a Comment