.கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் – ரிஷாத், அதாவுல்லா, ஹஸனலி ஒரே அணியில் போட்டியிடப்போவதாக Inamullah
Masihudeen சகோதரர் தகவல் ஒன்றை ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.
உண்மையில் வரவேற்கத்தக்க விடயமாகவே இவரின் தகவல்
இருந்தாலும் தற்போது அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில்
மக்களின் நம்பிக்கையையும் அதிக ஆதரவையும் பெற்ற ஒரு கட்சியாக மாறியுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் கூட இக்கட்சிக்கு அம்பாறை மாவட்டத்தில் சுமார் 33 ஆயிரம்
மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் ரிஷாத், அதாவுல்லா, ஹஸனலி கூட்டணியில் .கிழக்கு மாகாண சபைத்
தேர்தலில் போட்டியிட முயற்சி எடுப்பவர்கள் கிழக்கு மாகாண சபைக்கு முதலமைச்சராக யாரை
நியமிப்பது அந்த வேட்பாளர் யார் என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டிய பொறுப்பை கிழக்கு
மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையான மக்களின் ஆதரவைத் தேடி
வைத்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களிடம்
வழங்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்தும் அபிப்பிராயமுமாக இருந்து கொண்டிருக்கின்றது.
எனவே, ரிஷாத், அதாவுல்லா, ஹஸனலி கூட்டணியை மக்கள் வரவேற்கின்றார்கள். ஆனால், கூட்டணியில் உள்ளவர்கள் முடிவுகளை எடுப்பதில் மக்களின் அதிக செல்வாக்கைப் பெற்றுள்ள . அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
அவர்களிடம் வழங்க வேண்டும் என்பதே மக்களின் அபிப்பிராயமாக உள்ளது.
0 comments:
Post a Comment