முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ நடத்திய
இப்தார் நிகழ்வு
கொழும்பு - 07, விஜேராம மாவத்தையில் உள்ள அவரது
உத்தியோகபூர்வ இல்லத்தில் கடந்த வியாழன்று (15) நடைபெற்றது.
உத்தியாகபூர்வ
இல்லத்தில் முதன்முறையாக நடத்திய இந்த இப்தாரில்
இலங்கையிலுள்ள பலஸ்தீன், ஈரான், ஈராக், துருக்கி,
பாகிஸ்தான், பங்களாதேஷ், ஓமான், ஐக்கிய அரபு
இராச்சியம் ஆகிய நாடுகளிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள்,
உலமாக்கள், முஸ்லிம் இயக்கங்களின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள்,
முஸ்லிம் ஊடகவியலாளர்கள்
மற்றும் ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சி அரசியல்வாதிகள் என சுமார்
300 பேர் கலந்து
கொண்டனர்.
முன்னாள்
பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, அம்பாந்தோட்டைப்
பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்
பஷில் ராஜபக்ஷ
உட்பட பொதுஜன
எச்சத் பெரமுன
முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
முன்னாள்
அமைச்சர் ஏ.எச்.எம்.
அஸ்வர், முஸ்லிம்
முற்போக்கு முன்னணியின் அமைப்பாளர் அப்துல் சத்தார்,
இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் ஹட்சன் சமரசிங்க
ஆகியோரும் இதில்
உரையாற்றினர்.
மஹ்தும்
ஏ. காதரின்
பாடல் ஒன்றும்
நிகழ்வில் இடம்பெற்றதோடு,
நிகழ்வை முன்னாள்
முஸ்லிம் சேவைப்பணிப்பாளர்
அஹ்மத் எம்.
முனவ்வர் தொகுத்து
வழங்கினார்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
0 comments:
Post a Comment