நாடு
திரும்பினர் மஹிந்தவும் பீரிஸும்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அவரது குழுவினரும் இன்று காலை
நாடுதிரும்பியுள்ளனர்.
இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
உள்ளிட்ட குழுவினர் இன்று காலை 8.25 மணியளவில்
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு கடந்த 28 ஆம் திகதி இந்தியா சென்றிருந்தார்.
அவருடன் ஜீ.எல். பீரிஸும் இந்தியாவுக்கான விஜயத்தில் இடம்பெற்றிருந்தார்.
சர்வதேச பெளத்த கலாசார சம்மேளனம் மகராஷ்டிரா
மாநிலத்தில் நடத்திய பெளத்த கலாசார மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர்
இந்தியாவுக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment