புதிய அரசியலமைப்புக்கு தேசிய காங்கிரஸ் எதிர்ப்பு
முன்னாள் அமைச்சர் அதாவுல்லா விளக்கம்
புதிய
அரசியலமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தேசிய காங்கிரஸ்,
மூவின மக்களும்
ஒற்றுமையாக வாழும் யாப்பு தேவையென தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்த
தேசிய காங்கிரஸ்
தலைவர் அதாவுல்லா
இதனை வலியுறுத்தினார்.
இச்சந்திப்பில்
ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணியின்
பங்காளிக் கட்சியான
தேசிய காங்கிரஸ்
முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் பற்றிக்
கலந்துரையாடப்பட்டன. புதிய அரசியலமைப்புக்கு
எதிர்ப்பு தெரிவித்த
தேசிய காங்கிரஸ்,
மூவினங்களும் சமாதானமாக வாழக்கூடிய அரசியலமைப்பை கொண்டு
வரவேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதிக்கு
வலியுறுத்தியது.
கட்சியின்
பாலமுனைப் பிரகடனத்தின்
நோக்கம் பற்றியும்
அதன் கருத்துக்கள்,
எதிர்பார்ப்புகள் பற்றியும் இக்கூட்டத்தில் விளக்கிக் கூறிய
தேசிய காங்கிரஸ்
தலைவர் அதாஉல்லா,
புதிதாக கொண்டுவரப்பட்ட
மாகாண சபைகளுக்கான
தேர்தல் முறையானது
சிறுபான்மை மக்களை மிகவும் பாதித்திருப்பதாகவும் எடுத்துக் கூறினார்.
தேர்தல்
முறையானது இரத்துச்
செய்யப்பட வேண்டும்
என்று கூறிய
தலைவர் அதாஉல்லா
பிரகடனத்தின் பிரதியொன்றையும் ஜனாதிபதியிடம்
கையளித்தார். ஜனாதிபதியின் தலைமையில் கூடவிருக்கும் குழுவினுடைய
பரிசீலனைக்காக அது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment